தெலுங்கு சினிமாவில் முன்னணி கமர்ஷியல் இயக்குனராக வலம் வந்த ராஜமௌலி மகதீரா, ஈகா, பாகுபலி மற்றும் ஆர் ஆர் ஆர் ஆகிய படங்களின் மூலம் இந்தியா முழுவதும் அறியப்படும் இயக்குனர் ஆனார். தற்போது அவர் மகேஷ் பாபுவை வைத்து இயக்கும் படத்தை ஹாலிவுட்டின் வால்ட் டிஸ்னி தயாரிக்கிறது. ஜேம்ஸ் கேமரூன் வழங்குகிறார்.
இதையடுத்து உலகளவில் கவனிக்கப்படும் இயக்குனராக உயர்ந்துள்ளார் ராஜமௌலி. அவர் இயக்கத்தில் நடிக்க, நடிகர்கள் காத்துக் கிடக்கிறார்கள். ஆனால் “அவர் படத்தில் நான் நடிக்க மாட்டேன் என்றும் அவர் படத்தில் நடித்துதான் நான் என்னை நிரூபிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை” எனக் கூறியுள்ளார் தெலுங்கு சினிமா சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி.
இது சர்ச்சையை எழுப்பிய நிலையில் தன்னுடைய பேச்சுக்கு அவர் விளக்கமளித்துள்ளார். அதில் “ராஜமௌலி ஒரு படத்துக்கு மூன்று முதல் நான்கு ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறார். ஆனால் நான் ஒரு ஆண்டுக்கு நான்கு படங்களில் நடிக்கிறேன். இப்போது கூட நான் ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறேன். அதனால்தான் அவருடன் நான் பணியாற்ற மாட்டேன் என்று கூறினேன்” எனக் கூறியுள்ளார்.