Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மூத்த நடிகர் அவர்கள் ரவிகுமார் காலமானார்… திரையுலகினர் அஞ்சலி!

Advertiesment
அவர்கள் ரவிக்குமார்

vinoth

, வெள்ளி, 4 ஏப்ரல் 2025 (15:45 IST)
தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவரான அவர்கள் ரவிகுமார் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமாகியுள்ளார். அவருக்கு வயது 78. கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட ரவிக்குமார் 100க்கும் மேற்பட்ட மலையாளப் படங்களில் நடித்துள்ளார். தமிழில் இவர் அறிமுகமானது பாலச்சந்தரின் அவர்கள் படத்தில்.

கதாநாயகனாக அவருக்கு பெரிய அளவில் படங்கள் இல்லாத போது குணச்சித்திர வேடங்களை ஏற்று நடிக்கத் தொடங்கினார்.  பகலில் ஒரு இரவு எனும் படத்தில் ஸ்ரீதேவியுடன் இணைந்து அவர் நடித்த இளமை எனும் பூங்காற்று பாடல் இன்றளவும் கொண்டாடப்படும் ஒன்றாக உள்ளது.அதன் மூலம் தமிழில் அறியப்பட்ட நடிகராக ஆன அவர் ஒரு கட்டத்துக்குப் பின்னர் சீரியல்களில் நடிக்கத் தொடங்கினார்.

பல தொலைக்காட்சி சீரியல்களில் பல முக்கியமான வேடங்களை ஏற்று நடித்துள்ள ரவிகுமாரின் இழப்பு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எம்புரான் படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டன… சட்டசபையுல் அறிவித்த முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!