Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கு: கணவர் ஹேமநாத் விடுதலை..!

Mahendran
சனி, 10 ஆகஸ்ட் 2024 (12:44 IST)
சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவரது கணவர் ஹேமநாத்தை வழக்கில் இருந்து விடுவித்து திருவள்ளூர் மாவட்ட மகிளா நீதிமன்றம் தீர்ப்பு  அளித்துள்ளது.
 
பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட பல சீரியல்களை நடித்த சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சித்ராவை தற்கொலைக்கு தோன்றியதாக அவரது கணவர் ஹேம்நாத்தை கைது செய்தனர்.
 
இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. மேலும் சித்ராவின் கணவர் ஹேம்நாத் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று இருந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.
 
இந்த தீர்ப்பில் சித்ரா மரணத்திற்கு ஹேம்நாத் தான் காரணம் என்பதை நிரூபிக்க உரிய ஆதாரங்கள் காட்டப்படவில்லை என்று கூறி அவர் விடுதலை செய்யப்படுவதாக நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார். இந்த தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள ‘மூக்குத்தி அம்மன்’ டிரைலரே இப்போதே தயார் செய்த சுந்தர் சி..!

ரிலீசுக்கு 5 மாதங்கள் இருக்கும்போதே கோடிக்கணக்கில் சம்பாதித்துவிட்ட ‘ஜனநாயகன்’ விநியோகிஸ்தர்..!

ஷங்கர் அடுத்த படத்தில் ரஜினி, கமல் நடிக்கிறார்களா? வழக்கம்போல் வதந்தியை பரப்பும் யூடியூபர்கள்..!

நாங்கள் சில ஆண்டுகளாகவே கணவன் - மனைவியாக வாழ்ந்து வருகிறோம்: மாதம்பட்டி ரங்கராஜின் ஆடை வடிவமைப்பாளர் ஜாய்..!

ரூ.1000 கோடி கடன் வாங்கி தருவதாக மோசடி.. நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments