விடுதலை படத்தின் மூலம் கதாநாயகனான சூரி அதன் பின்னர் நடித்த கருடன் திரைப்படம் கமர்ஷியல் வெற்றியப் பெற்றது. அதையடுத்து இப்போது கொட்டுக்காளி படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை கூழாங்கல் படத்தின் மூலம் கவனம் பெற்ற பி எஸ் வினோத்ராஜ் இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிக்கிறார். அன்னாபென் கதாநாயகியாக நடிக்கிறார்.
படம் ஆகஸ்ட் 23 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் சென்று கலந்துகொண்டு பாராட்டுகளைப் பெற்றது. இந்நிலையில் படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் கொட்டுகாளி படம் பற்றியும் தன்னுடைய கதாபாத்திரம் பற்றியும் சூரி வெளியிட்டுள்ள சமூகவலைதளப் பதிவில் “என்னுடைய முந்தைய படங்களான விடுதலை, கருடனிலிருந்து முற்றிலும் வேறுப்பட்ட திரைப்படமாக கொட்டுக்காளி இருக்கும். இது ஒரு Mainstream Content Oriented திரைப்படம். உண்மைக்கு மிக நெருக்கமான படம். இதில் வரும் என்னுடைய பாண்டி என்கிற கதாபாத்திரம் எல்லா குடும்பங்ளிலும் இருக்கும் ஒருவன் தான். இந்த சமூகம் சொல்லிக்கொடுத்த உறவு முறைகளையும், நம்பிக்கைகளையும் பெரிதும் நம்புகிற ஒரு கதாபாத்திரம் தான் பாண்டி. இந்த படத்தில் வரும் பயணத்தில், இந்த சமூகம் உருவாக்குன பாண்டிக்கும், பாண்டி என்கிற தனிப்பட்ட ஒருவனுக்கும் நடக்குற மன போராட்டத்த சரியா பிரதிபலிக்கனும்னு ரொம்ப கவனமா இருந்தேன். அதை சரியாவும் பண்ணி இருக்கேன்னு நம்புறேன். நீங்க அவசியம் பார்க்கவேண்டிய திரைப்படமாக கொட்டுக்காளி நிச்சயம் இருக்கும்.” எனத் தெரிவித்துள்ளார்.