இயக்குனர் சிம்புதேவன் இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தவர். அந்த படத்தில் அவர் வடிவேலுவைக் காட்சிப்படுத்தியவிதமும், நகைச்சுவைக் காட்சிகளும் இன்றளவும் சிரிப்புமழையை வரவழைக்கும் விதத்திலானவை. அந்த படத்த்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பின்னர் அறை எண் 305-ல் கடவுள், புலி, ஒரு கண்ணியும் 3 களவாணிகளும் ஆகிய படங்களை இயக்கினார். இதையடுத்து வெற்றிக்கூட்டணியான இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்துக்காக வடிவேலுவுடன் இணைந்தார். ஆனால் அந்த படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதில் தொடர்ந்து நடிக்க மறுத்தார். அதனால் அந்த படம் இப்போது கைவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிம்புதேவன் தற்போது இயக்கும் படத்தில் யோகி பாபு நடித்து வருகிறார். சிம்பு தேவனின் மற்ற படங்களைப் போல இந்த படமும் பீரியட் படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் 96 படத்தின் மூலம் கவனம் பெற்ற கௌரி கிஷன் கதாநாயகியாக நடித்து வருகிறார்.