Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆளாக்கி அழகு பார்த்த அன்னை - வடிவேலுவின் அம்மாவுக்கு முதல்வர் இரங்கல்!

Advertiesment
ஆளாக்கி அழகு பார்த்த அன்னை - வடிவேலுவின் அம்மாவுக்கு முதல்வர் இரங்கல்!
, வியாழன், 19 ஜனவரி 2023 (12:33 IST)
வைகைப்புயல் வடிவேலுவின் தாயார் சரோஜினி (எ) பாப்பா (87) மதுரை விரகனூரில் நேற்று இரவு உடல்நல குறைவால் காலமானார். வயது முதிர்வு காரணமாக உடல்நலக்குறைவாக இருந்து வந்த அவர் திடீரென நேற்று ( ஜனவரி 18 இரவு காலமானதையடுத்து அவருக்கு திரைத்துறை பிரபலங்கள் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 
 
இந்நிலையில் முதல்வர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில்  "நடிகர் வடிவேலு அவர்களின் அன்புத்தாயார் திருமதி. சரோஜினி அம்மாள் என்கிற பாப்பா அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
 
''ஆளாக்கி அழகு பார்த்த அன்னையின் மறைவு என்பது எந்த ஒரு மகனுக்கும் ஈடுசெய்ய இயலாதஇழப்பாகும். 'வைகைப் புயல்' திரு. வடிவேலு அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.'' என மாண்புமிகு முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பணத்துக்காகதான் நடிக்க வந்தேன்..! சர்ச்சையான பேச்சு! – ப்ரியா பவானி சங்கர் விளக்கம்!