Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பொங்கலை திருவிழாவாக மாற்றியது திராவிட இயக்கம்! – முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

Advertiesment
MK Stalin
, சனி, 14 ஜனவரி 2023 (12:33 IST)
நாளை பொங்கல் திருவிழா தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

அதில் “சட்டப் பேரவையின் மாண்பையும், தமிழ்நாட்டின் சுயமரியாதையையும் காக்கின்ற அரசியல் சட்டம் வழங்கியுள்ள அறவழியிலான போராட்டத்தை மேற்கொண்ட காரணத்தால், இந்தப் பொங்கல் விழா நமக்குக் கூடுதல் இனிப்பு நிறைந்த சர்க்கரைப் பொங்கலாக அமைந்துள்ளது.

பொங்கல் திருநாளை நமது பண்பாட்டுத் திருவிழாவாக மாற்றிய பெருமை திராவிட இயக்கத்தையே சாரும். பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் முத்தமிழறிஞர் கலைஞரும் “இதுதான் தமிழர் திருநாள்” என மக்களின் மனதில் பதிந்திடும் வகையில் சிறப்பான கொண்டாட்டத்தை முன்னெடுத்தனர்.

சமத்துவமும், சுயமரியாதை உணர்வும் கொண்ட சமூகநீதிக் கொள்கையுடன் தொடர்ந்து பயணிப்போம். மக்களின் நலன் காப்போம். மாநில உரிமைகளை விட்டுக் கொடுக்காமல் மீட்போம். ஜனநாயகப் பாதையில் பயணிப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆளுனர் மீது தமிழ்நாடு அரசு புகார்! நடவடிக்கை எடுத்த குடியரசு தலைவர்!?