Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

IPL-2020; சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வ .... ஜஸ்ட் மிஸ்ஸான சாதனை ! ரசிகர்கள் அப்செட்

Advertiesment
IPL-2020; சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வ .... ஜஸ்ட் மிஸ்ஸான  சாதனை ! ரசிகர்கள் அப்செட்
, புதன், 23 செப்டம்பர் 2020 (16:45 IST)
நேற்று மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற சென்னை  அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது.

20 ஓவர்கள் முடிவியில்  ராஜஸ்தான் அணி  216 ரன்கள் எடுத்து, சென்னை சூப்பர் கிங்ஸ்அணிக்கு 217  ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இதனால் ஆட்டம் சூடு பிடுக்கும் என எதிர்ப்பார்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து ஆடிய சென்னை கிங்ஸ் அணியின் டுபிளஸிஸ்        29 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து அசத்தினார். இன்னொரு பக்கம் தோனி தனது பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பின்னர் 12 பந்துகளில் 48  ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இக்கட்டான நிலை சென்னை அணி சென்றது. அப்போது நம்பிக்கை நட்சத்திரம் டுபிளஸிஸ் அவுட் ஆகிட மேலும் இறுக்கமான சூழல் சென்னைக்கு நிலவியது.ஆனாலும் தோனியின் கடுமையான முயற்சி அணிக்கு நல்ல நம்பிக்கை கொடுத்தாலும் வெற்றி வாய்ப்பு ராஜஸ்தானுக்கு சென்றது. எனவெ ராஜஸ்தான் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது. சென்னை அணி திக்கித் திணறி 200 மட்டுமே எடுத்தது குறிப்பிடத்தக்கது.                                         

நேற்றைய போட்டியில்  சென்னை அணியும் , ஹைதராபாத் அணியும் பந்துகளை எதிரணியினரின் பந்துகளைச் சிதறடித்தனர். அப்போது இருஅணிகளும் 33 சிக்ஸர்கள் அடித்து சாதனை படைத்தனர். அதில் சாம்சந்9, டுபிளசிஸ்-7, தோனி-3 எடுத்தனர். ஆனால் இன்னுன் 1 சிக்ஸ்டர் மட்டும் அடித்திருந்தால் ஒரு இன்னிங்ஸில் அடிக்கப்பட்ட சாதனையாக பதிவாகியிருக்கும். அதனால் ஜஸ்ட் மிஸ்டில் சாதனை பறிபோனது.

கடந்த 20118 ஆம் ஆண்டு  சென்னை- ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான போட்டியில் 33 சிக்ஸ்டர் அடித்தனர். எனவே இந்த சாதனை இன்னும் முறியடிக்கப்படவில்லை.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

துப்பாக்கியோடு நிற்கும் அஜித் இயக்குனர்…. வைரலாகும் புகைப்படம்!