Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

துப்பாக்கியோடு நிற்கும் அஜித் இயக்குனர்…. வைரலாகும் புகைப்படம்!

துப்பாக்கியோடு நிற்கும் அஜித் இயக்குனர்…. வைரலாகும் புகைப்படம்!
, புதன், 23 செப்டம்பர் 2020 (16:38 IST)
அஜித்தின் வலிமை படத்தின் இயக்குனர் ஹெச் வினோத் துப்பாக்கியோடு நிற்கும் புகைப்படம் ஒன்று வைரலாகியுள்ளது.

நேர்கொண்ட பார்வை வெற்றிக்குப் பின்னர் அஜித் இப்போது வலிமை படத்தில் போலிஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கோரோனா லாக்டவுனால் தடைபட்டுள்ளது. இந்த படத்துக்காக நல்ல கட்டுமஸ்தான உடல் தோற்றத்தில் தோன்ற வேண்டும் என்று அதன் இயக்குனர் ஹெச் வினோத் முன்பே அஜித்திடம் தெரிவித்திருந்தார். அதனால் இப்போது இந்த லாக்டவுனை பயன்படுத்தி அஜித் தனது உடல்வாகை நன்கு ஏற்றி வருகிறார்.

இந்நிலையில் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்புக்கான பணிகளை முடுக்கி விட்டுள்ளது படக்குழு. இம்மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்கும் என சொல்லப்படுகின்ற நிலையில் இப்போது வலிமைப் படத்தின் இயக்குனர் ஹெச் வினோத் துப்பாக்கியோடு நிற்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த படத்தில் அஜித் ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பள்ளத்தில் விழுந்த குழந்தை மீட்ட ரியல் ஹீரோ …முன்னணி நடிகரின் வைரல் வீடியோ