Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக அரசுக்கு எதிராக விஷாலின் வழக்கு: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

Webdunia
புதன், 12 பிப்ரவரி 2020 (12:54 IST)
நடிகர் சங்கத்துக்கு தனி அதிகாரியை தமிழக அரசு நியமனம் செய்தது போல் சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் என். சேகர் என்பவரை தனி அதிகாரியாக தமிழக அரசு நியமனம் செய்தது
 
இந்த நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்று இந்த வழக்கு குறித்து ஒரு அதிரடி உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது 
 
இதன்படி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஜூன் 30-ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை அடுத்து இன்னும் நான்கு மாதங்களுக்குள் தயாரிப்பாளர் சங்க தேர்தல் நடத்தப்பட்டு அதன் நிர்வாகிகள் பதவி ஏற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
தயாரிப்பாளர் சங்க தேர்தல் மீண்டும் நடைபெறும்போது மீண்டும் தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு விஷால் போட்டியிடுவார் என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

தொடர்புடைய செய்திகள்

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

அடுத்த கட்டுரையில்
Show comments