Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டெல்லி மக்களுக்கு நன்றி! ஆம் ஆத்மி-க்கு ஆதரவு டிவிட் போட்ட ப.சி - காங்கிரஸ் ஷாக்!!

Advertiesment
டெல்லி மக்களுக்கு நன்றி! ஆம் ஆத்மி-க்கு ஆதரவு டிவிட் போட்ட ப.சி - காங்கிரஸ் ஷாக்!!
, செவ்வாய், 11 பிப்ரவரி 2020 (15:48 IST)
தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், டெல்லி மக்களுக்கு நன்றி தெரிவித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் டிவிட் செய்துள்ளார். 
 
நடந்து முடிந்த டெல்லி சட்டமன்ற தேர்தலில் வாக்குப் பதிவில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வரும் நிலையில் மொத்தமுள்ள 70 இடங்களில்  63 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது ஆம் ஆத்மி. 
 
இதனைத்தொடர்ந்து பாஜக 7 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் ஒரு இடத்தை கூட இதுவரை கைப்பற்றவில்லை. தற்போதைய நிலவரப்படி பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு தேசிய கட்சிகளும் பின்னடைவில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 
 
எனவே, டெல்லியில் மீண்டும் ஆம் ஆத்மி ஆட்சி அமைவது உறுதி செய்யப்பட்டுள்ளதால், அரவிந்த் கெஜ்ரிவால் மூன்றாவது முறையாக முதல்வர் பதவியை ஏற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தன்னுடைய டிவிட்டர் பதிவில், ஆம் ஆத்மி வெற்றியடைந்துள்ளது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த டெல்லி மக்கள் பிரித்தாளும் மோசமான சித்தாந்தத்தைக் கொண்ட பாஜகவை தோற்கடித்துள்ளனர். 
 
2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் மக்கள் யாரைத் தேர்ந்தெடுக்கவேண்டும் என்பதைக் காட்டியதற்காக டெல்லி மக்களுக்கு மரியாதை செலுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். 
 
காங்கிரஸ் ஒரு இடத்தை கூட கைப்பற்றாத நிலையிலும் கவலை ஏதுமின்றி, பாஜக தோற்கடிக்கப்பட்டதற்கு ப.சிதம்பரம் மகிழ்ச்சி தெரிவித்திருப்பது கட்சிக்குள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என கூறப்படுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பார்டரில் பாஸ் ஆன அதிமுக; மெரிட் அடிக்க அதிரடி வியூகம்!!