Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இறுதிக் கட்டத்தை நெருங்கும் சந்திரமுகி 2- படக்குழு வெளியிட்ட லேட்டஸ்ட் அப்டேட்!

இறுதிக் கட்டத்தை நெருங்கும் சந்திரமுகி 2- படக்குழு வெளியிட்ட லேட்டஸ்ட் அப்டேட்!
, வெள்ளி, 24 பிப்ரவரி 2023 (08:46 IST)
2005 ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாக்கத்தில் உள்ளது.லாரன்ஸ், வடிவேலு, ராதிகா சரத்குமார் மற்றும் கங்கனா ரனாவத் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். மரகதமணி இசையமைக்கிறார். படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக மைசூரில் உள்ள ஒரு அரண்மணையில் படமாக்கி வருகிறார் பி வாசு. படத்தில் சந்திரமுகியாக நடிக்க பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ஒப்பந்தம் ஆகியுள்ளார். தற்போது படத்தின் கிளைமேக்ஸ் காட்சியை படமாக்கி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். அது சம்மந்தமான புகைப்படங்களை எல்லாம் கங்கனா வெளியிட்டிருந்தார்.

விறுவிறுப்பாக ஷூட்டிங் நடந்து வந்த நிலையில் தற்போது படத்தின் மூன்றாம் கட்ட ஷூட்டிங் நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. சமீபத்தில் கங்கனா ரனாவத் சம்மந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்கினர். மேலும் படத்தில் நாயகியாக மஹிமா நம்பியார் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராமராஜனின் சாமானியன் படத்துக்கு எதிரான வழக்கு… நீதிமன்றம் அளித்த தீர்ப்பு!