Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கத்தி முனையில் கருப்பு சிங்காரம் - வடிவேலு நடிக்க இருந்து கைவிடப்பட்ட படம்- பிரபல இயக்குனர் தகவல்!

Advertiesment
கத்தி முனையில் கருப்பு சிங்காரம்  - வடிவேலு நடிக்க இருந்து கைவிடப்பட்ட படம்- பிரபல இயக்குனர் தகவல்!
, வியாழன், 23 பிப்ரவரி 2023 (15:53 IST)
நடிகர், இயக்குனர் என கால்பதித்து தமிழ் சினிமா மற்றும் சீரியலில் பயணித்து வருபவர் நடிகர் மாரிமுத்து. தமிழில் இருக்கும் திறமையான குணச்சித்திர நடிகர்களில் மாரிமுத்துவும் ஒருவர். பரியேறும் பெருமாள் படத்தில் ஆனந்தியின் தந்தையாக அவர் நடித்திருந்த கதாபாத்திரம் அனைவராலும் பாராட்டப்பட்டது. இது தவிர, கொம்பன், பரியேறும் பெருமாள், கடைக்குட்டி சிங்கம் மற்றும் நம்ம வீட்டுப்பிள்ளை ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். ஆனால் நடிகராவதற்கு முன்பாக மாரிமுத்து இரண்டு படங்களை இயக்கியுள்ளார் என்பது பெரும்பாலானோர் அறியாத தகவல். அவர் இயக்கிட கண்ணும் கண்ணும் மற்றும் புலிவால் ஆகிய இரண்டு படங்களும் நல்ல விமர்சனம் பெற்றாலும், வணிக ரீதியாக வெற்றிபெறவில்லை. அதனால் இப்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பிரபல யுட்யூப் சேனலுக்கு அவர் அளித்த நேர்காணலில் தனனுடைய நீண்ட சினிமா பயணம் பற்றி பல சுவையான தகவல்களை பகிர்ந்து வருகிறார். அதில் தான் வடிவேலுவை வைத்து “கத்தி முனையில் கருப்பு சிங்காரம்” என்ற படத்தை இயக்க இருந்ததாகவும், ஆனால் சில காரணங்களால் அந்த படம் கைவிடப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹீரோயின் ஆயிட்ட குஷியில் அனிகா… கண்ணைக் கவரும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!