இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர் ராஜமௌலி. இவர் இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆல்யா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்டோர் நடித்து 2022 ஆம் ஆண்டு வெளியான படம் ஆர்.ஆர்.ஆர்.
விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சூப்பர் ஹிட் ஆன இந்த படத்தை ஆஸ்கர் விருது விழாவின் அனைத்து பிரிவுகளிலும் இப்படம் கலந்து கொண்டது.
ஆனால், இப்படம் ஆஸ்கருக்கு தேர்வாகாத நிலையில், ஒரிஜினியல் பாடல் பிரிவில் இப்படத்தில் கீரவாணி இசையில் இடம்பெற்ற நாட்டுக்குத்து பாடல் தகுதிபெற்று, கோல்டன் குளோப் விருதுகள் வழங்கும் விழாவில், ஆர்.ஆர்.ஆர். படத்தின் இடம்பெற்ற நாட்டுக் குத்து பாடல் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் விருது வென்றது.
எனவே இப்படம் ஆஸ்கர் விருதும் வெல்ல வேண்டுமென வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
இந்த நிலையில், வரும் ஜனவரி 24 ஆம் தேதி 95 வது ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை பட்டியல் அறிவிக்கப்பட உள்ளது.
ஏற்கனவே கோல்ட குளோப் விருது வென்றுள்ள ஆர்.ஆர்.ஆர் படத்திற்கு மேலும் ஒரு விருது கிடைக்கலாம் எனத் தகவல் வெளியாகிறது.
அதன்படி, ஆர்.ஆர்.ஆர் பட நடிகர் ஜூனியர் என்.டி.ஆர்- சிறந்த நடிகர் பட்டியலில் இடம்பெற அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகிறது
இதற்கான முன்னெடுப்பை அமெரிக்காவைச் சேர்ந்த யுஎஸ்ஏ டுடே இணையதளம் ஆஸ்கர் விருது முன்னெடுப்பில், ஜூனியர் என்.டி.ஆர் நடிகரை போட்டியாளராகப் அங்கீகரித்துள்ளது.
எனவே, சிறந்த வெளி நாட்டு ஒரிஜினல் பாடல் சிறந்த நடிகருக்கான பிரிவில் இசையமைப்பாளர் கீரமணியும், ஜூனியர் என்.டி.ஆரும் விருது வெல்ல வாய்ப்புகள் குவிந்து வருகிறது.