பாலிவுட் நடிகரும் பாஜக எம்பியுமான அனுபம் கேரின் மனைவிக்கு ரத்தப் புற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவின் பிரபல நடிகர் அனுபம் கேர். இவர் தேசிய விருது உள்ளீட்ட பல்வேறு விருதுகள் பெற்றவர் ஆவார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் பாஜக எம்பியாக இருக்கிறார்.
கடந்த கடந்த 1985 அம் ஆண்டு கிரொன் கேர் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், இவரது மனைவி கிரோன் கேருக்கு மையெலோமா என்ற ரத்தப் புற்றுநோய் இருப்பதக நடிகர் அனுபம் கேர் கூறியுள்ளார்.
கிரோன் கேர் பாலிவுட்டிலும் சின்னத்திரையிலும் பிரபல நடிகையாக விளங்கியவர். ரங்க் தே பசந்த், ஃபனா,. ஓம் சாந்தி ஓம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.