நடிகையும் அரசியல்வாதியுமான ஸ்மிருதி இரானி மீண்டும் சின்னத்திரைக்கு திரும்புகிறார். இதுகுறித்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த தொலைக்காட்சித் தொடரான 'கியூங்கி சாஸ் பி கபி பாஹு தி'யின் புதிய அத்தியாயம் குறித்த ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இதில் ஸ்மிருதி தோன்றி ரசிகர்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளார்.
'கியூங்கி சாஸ் பி கபி பாஹு தி' தொடர் முதன்முதலில் 2000 முதல் 2008 வரை ஒளிபரப்பானது. தொடர்ந்து ஏழு ஆண்டுகள் இந்திய தொலைக்காட்சியில் முதலிடத்தில் இருந்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
2014ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று ஒரு அமைச்சராக ஸ்மிருதி இரானி பணியாற்றியதால் அந்த தொடரில் இருந்து விலகிய அவர், கடந்த 2024ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வி அடைந்ததால் தற்போது மீண்டும் தொடரில் நடிக்க வந்துவிட்டார். இனி சில வருடங்கள் நடிப்பில் கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.