Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எகிறிய பட்ஜெட்… கேப்டன் மில்லர் படத்தை இரண்டு பாகங்களாக ரிலீஸ் செய்ய திட்டம்?

எகிறிய பட்ஜெட்… கேப்டன் மில்லர் படத்தை இரண்டு பாகங்களாக ரிலீஸ் செய்ய திட்டம்?
, வியாழன், 19 அக்டோபர் 2023 (07:39 IST)
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் ராக்கி மற்றும் சாணி காகிதம் ஆகிய படங்களுக்கு அடுத்து தனது மூன்றாவது படமான கேப்டன் மில்லர் படத்தை தனுஷை வைத்து இயக்கி வருகிறார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது.  இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங்கை முடித்த தனுஷ் அடுத்து தன்னுடைய 50 ஆவது படத்தில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் இப்போது படத்தின் பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன.

இப்போது இறுதிகட்ட ஷூட்டிங்கை இயக்குனர் அருண் மாதேஸ்வரன் நடத்தி வருகிறார். இந்நிலையில் இந்த படத்தின் பட்ஜெட் எதிர்பார்த்ததை விட அதிகமாகிவிட்டதால் படத்தை இரண்டு பாகங்களாக ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. முதல் பாகம் டிசம்பர் மாதத்திலும், இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலும் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

18 நாளில் ஒட்டுமொத்த படத்தையும் முடித்த சந்தானம் பட இயக்குனர்!