Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆண்கள்-பெண்கள் இருவருமே போதை வஸ்துவே – பார்த்திபன் டுவீட்

Advertiesment
ஆண்கள்-பெண்கள் இருவருமே போதை வஸ்துவே – பார்த்திபன் டுவீட்
, வியாழன், 19 நவம்பர் 2020 (15:49 IST)
இன்று சர்வதேச ஆண்கள் தினம். இதை முன்னிட்டு பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். ஆண்கள் பலரும் தனக்குத் தானே வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் எதிலும் புதுமையும் சுவாரஸ்யமாகக் கூறும் நடிகர் பார்த்திபன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஆண்கள் தினம் குறித்து ஒரு பதிவிட்டுள்ளார்.

அதில், ஆண்+கள் தினமாம் இன்று!மீதி தினங்கள்?பெண்கள் தினங்களே! தென்னங்கள், பனங்கள் அதுவும் ஒரு மரத்துக் கள் உடலுக்கு நல்லதாம்.(சுவைத்ததில்லை இதுவரை)தெ.கள், ப.கள் போல ஆண்கள்-பெண்கள் இருவருமே போதை வஸ்துவே!ஒரு மரம் போல, ஒரே மனமாய் வாழ முடிவதில்லை.தில்லை கடவுள் போல ஒரு ஆணுடலின் பாதிக்தில்லை கடவுள் போல ஒரு ஆணுடலின் பாதிக்குள் ஒரே ஒரு பெண்ணோ,ஒரு பெண்ணுடலின் மீதிக்குள் ஒரே ஒரு ஆணும் மட்டுமே அபூர்வம்!(அழகி’ படம் போல அழகன்’ கதைகள் ஏராளம்)ஆண் பெண் பேதம் மனதிற்கு இல்லை. மனம் போல் வாழ்வோம்- யார் மனமும் நோகாமல்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபுதேவா ரகசியமாக திருமணம் செய்துகொண்டாரா? வெளியான ரகசியம்!