Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பொம்மை படத்தில் ரீம்க்ஸ் செய்யப்பட்டுள்ள இளையராஜாவின் பாடல்!

பொம்மை படத்தில் ரீம்க்ஸ் செய்யப்பட்டுள்ள இளையராஜாவின் பாடல்!
, புதன், 23 ஜூன் 2021 (15:28 IST)
யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள பொம்மை படத்தில் இளையராஜாவின் ஹிட் பாடல் ஒன்று ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளது.

மான்ஸ்டர் படத்தின் மெகா ஹிட் வெற்றியை தொடர்ந்து நடிகர் எஸ்.ஜே,சூர்யா ராதாமோகன் இயக்கத்தில் "பொம்மை" படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் மற்றும் சாந்தினி நடிக்கின்றனர்.  யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படம் காதல் கலந்த ஒரு திரில்லர் படமாக உருவாகியுள்ளது. லாக்டவுனுக்கு முன்னதாக வெளியான இப்படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

படம் ரிலீஸுக்காக தயாராக உள்ள நிலையில் படத்தின் கதாநாயகன் எஸ் ஜே சூர்யா படத்தில் யுவனின் இசையமைப்புப் பணிகளை பற்றி வானளாவ புகழ்ந்து பேசியுள்ளார். அது சம்மந்தமான வீடியோ ஒன்று இணையத்தில் பரவ அதை தன் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த எஸ் ஜே சூர்யா ‘என்னை நம்புங்கள். பொம்மை படத்தில் யுவன் பாடல்கள் சிறப்பாக இருக்கும். பின்னணி இசை வேறொரு தளத்தில் இருக்கும்’ எனப் புகழ்ந்து தள்ளியிருந்தார்.

இந்நிலையில் இப்போது இந்த படத்தின் பாடல்கள் பற்றி மற்றொரு அப்டேட் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் இளையராஜா இசையில் 1980களில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற உல்லாசப்பறவைகள் படத்தில் இடம்பெற்ற தெய்வீக ராகம் என்ற பாடலை ரீமிக்ஸ் செய்துள்ளனராம். அந்த பாடல் மிகப்பெரிய அளவில் பேசப்படும் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன்!