Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியா என்ற அடிமைப்பெயரை மாற்றவேண்டும்… நடிகை கங்கனா ரனாவத் சர்ச்சை கருத்து!

இந்தியா என்ற அடிமைப்பெயரை மாற்றவேண்டும்… நடிகை கங்கனா ரனாவத் சர்ச்சை கருத்து!
, புதன், 23 ஜூன் 2021 (13:03 IST)
நடிகை கங்கனா ரனாவத்தின் அடுத்த சர்ச்சை முத்தாக இந்தியாவின் பெயரை மாற்ற வேண்டும் எனக் கூறியுள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் தற்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை தழுவிய “தலைவி” படத்தில் நடித்து வருகிறார். இவர் ட்விட்டரில் சமீப காலமாக இட்டு வரும் பதிவுகள் அடிக்கடி சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. இந்திய கொரோனா நிலவரம் குறித்து பாப் பாடகி ரிஹானா பதிவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இவர் பதிவிட்ட ட்விட்டர் பதிவு முதலாக அடிக்கடி இவரது ட்விட்டர் பதிவுகள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. அதே போல மும்பை மாநில அரசோடு ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக இவர் மேல் மும்பை போலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் வாய்க்கு வந்ததை எல்லாம் உளறிக் கொண்டு இருக்கும் கங்கனா நேற்று ‘இந்தியா என்ற பெயர் அடிமைப் பெயராக உள்ளது. அது பிரிட்டிஷார் நமக்கு கொடுத்த பெயர். நகர்ப்புற வளர்ச்சியில் நாம் உயர்ந்தாலும், வேதங்கள், பகவத் கீதைமற்றும் யோகாவில் ஆழமாக வேரூன்றி இருந்தால் உலகின்மிகப்பெரிய நாடாக வெளிப்படுவோம். எனவே நமது பழமையான பெயரான பாரதம் என்பதையே நமது நாட்டுக்கு சூட்டவேண்டும்.’ எனக் கூறியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இலங்கை அகதிகளின் வாரிசுகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கவேண்டும்… ராமதாஸ் கோரிக்கை!