Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்னும் ரிலீஸாகாத டெனட் படத்தை விமர்சனம் செய்த ப்ளு சட்ட மாறன் – அதிகமாகும் கண்டனம்!

இன்னும் ரிலீஸாகாத டெனட் படத்தை விமர்சனம் செய்த ப்ளு சட்ட மாறன் – அதிகமாகும் கண்டனம்!
, புதன், 2 செப்டம்பர் 2020 (18:09 IST)
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர் ப்ளு சட்ட மாறன். இவர் செய்யும் விமர்சனங்கள் இணையத்தில் மிகவும் பிரபலம்.

டார்க் நைட், இன்செப்ஷன் மற்றும் இண்டர்ஸ்டெல்லார் போன்ற தன்னுடைய படங்களின் மூலம் உலக சினிமா ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் கிறிஸ்டோபர் நோலன். இவர் இப்போது டெண்ட் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் டைம் ரிவர்ஸிங் என்ற அறிவியல் கருத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த படம் கொரோனா காரணமாக நீண்ட கால தாமதத்துக்குப் பின் நாளை வெளியாகியுள்ளது. ஆனால் அதற்கு முன்னதாகவே பைரசியில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதை பார்த்து தமிழ் சினிமாக்களை விமர்சனம் செய்து வரும் ப்ளு சட்ட மாறன், டெனட் படத்தை விமர்சனம் செய்துள்ளார். அதில் படத்தை கண்டபடி விமர்சனம் செய்துள்ளார்.  ஆனால் படத்தை தியேட்டரில் பார்க்காமல் திருட்டு தனமாக பார்த்த அவரைக் கிண்டல் செய்யும் விதமாக இணையத்தில் பல பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மன்னவன் வந்தானடி படத்தைக் கைப்பற்றியவர் யார் தெரியுமா? சந்தானமும் செல்வராகவனும் செய்யும் தியாகங்கள்!