பிரபல இயக்குனர் ஒருவர் ஹாலிவுட்டுக்கே சென்று படம் எடுக்க வேண்டும் என தான் விரும்புவதாக நடிகர் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.
ஹாலிவுட்டில் சமீபத்தில் வெளியாகி பரவலான வரவேற்பையும், விருதுகளையும் அள்ளிய படம் 1917. முதல் உலக போரின்போது முக்கியமான செய்தி ஒன்றை ஒரு படைப்பிரிவில் இருந்து மற்றொரு படைப்பிரிவுக்கு கொண்டு செல்லும் இரண்டு வீரர்கள் குறித்தது இந்த படம். போரின் தாக்கங்களை உயிர்ப்போடு பதிவு செய்ததாக இந்த படம் பலரால் பாராட்டப்பட்டது.
இந்த படத்தை சமீபத்தில் பார்த்த ‘கோலமாவு கோகிலா’ படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தனது ட்விட்டரில் ”1917 தவிர்க்க கூடாத படம். சினிமா ரசிகர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும். இது போன்ற மாயாஜாலங்கள் எப்போதாவதுதான் நடைபெறும்” என கூறியுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள நடிகர் சிவகார்த்திகேயன் ”இது மறுபடியும் நடக்கும் சார்.. நீங்க ஹாலிவுட் படம் பண்ணும்போது” என கூறியுள்ளார்.
சிவகார்த்திக்கேயன் வெளிப்படையாகவே பாராட்டியிருக்கிறாரா? அல்லது பாராட்டுவது போல கிண்டல் செய்துள்ளாரா என புரியாமல் உள்ளூர் சினிமா ரசிகர்களும், உலக சினிமா ரசிகர்களும் குழம்பி போயுள்ளனர்.