தீபாவளி ரன்னர் ‘பைசன்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
திங்கள், 17 நவம்பர் 2025 (16:22 IST)
பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் மற்றும் வாழை ஆகிய படங்களை அடுத்து மாரி செல்வராஜின் ஐந்தாவது படமாக ‘பைசன்’நேற்று ரிலீஸானது. இந்த படத்தில் துருவ் விக்ரம்மோடு அனுபமா பரமேஸ்வரன், பசுபதி, ரஜிஷா விஜயன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் அப்லாஸ் எண்டர்டெயின்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் ஒன்றிணைந்து இந்த படத்தைத் தயாரித்துள்ளனர்.

இந்த படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி ரிலீஸாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது. பத்து நாட்களில் உலகளவில் சுமார் 55 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தொடர்ந்து இரண்டாவது வாரத்தில் வெற்றிகரமாக ஓடிவரும் பைசன் படத்துக்கு வெவ்வேறு தளங்களில் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

திரையரங்கு மூலமாக சுமார் 70 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டியுள்ள பைசன் திரைப்படம் தற்போது ஓடிடி ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. வரும் 21 ஆம் தேதி முதல் பைசன் திரைப்படம் நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் கவர்ந்திழுக்கும் தமன்னா… வைரல் க்ளிக்ஸ்!

அழகுப் பதுமை தமன்னாவின் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

தீபாவளி ரன்னர் ‘பைசன்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

விஜய் சேதுபதி அப்படி செய்தது வருத்தமாக இருந்தது… மனநிலை பாதிக்கும் நிலைக்கு சென்றேன் –சேரன் ஆதங்கம்!

கௌரவ ஆஸ்கர் விருதைப் பெற்ற ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments