Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமன்னாவுக்கு சிரஞ்சீவி படக்குழு கொடுத்த பிறந்த நாள் பரிசு

தமன்னாவுக்கு சிரஞ்சீவி படக்குழு கொடுத்த பிறந்த நாள் பரிசு
, வெள்ளி, 21 டிசம்பர் 2018 (16:27 IST)
இன்று பிறந்த நாள் கொண்டாடும் தமன்னாவுக்கு, பரிசு கொடுக்கும் விதமாக அவரது ஃபர்ஸ்ட் லுக் தோற்றத்தை சைரா நரசிம்ம ரெட்டி படக்குழு வெளியிட்டுள்ளது.


 
சுதந்திரப்போராட்ட வீரர் சைரா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டு வருகிறது. சிரஞ்வி நடிக்கும இப்படம் அவருக்கு 151 வது படமாகும். பல கோடி செலவில் தயாராகும் இப்படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களை தவிர, கன்னட நடிகர் சுதீப், தமிழ் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை தமன்னா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்தி, தெலுங்கு, தமிழில் நேரடியாக வெளியாக உள்ள இப்படத்தை சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தயாரிக்கிறார்.
 
சில மாதங்களுக்கு முன்பு நயன்தாராவின் பிறந்த நாளின் போது அவரது ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு  வெளியிட்டளது. இப்போது அதே பாணியில் தமன்னாவின் பிறந்த நாளான இன்று அவரது தோற்றத்தை வெளியிட்டுள்ளது. இதில் தமன்னா லட்சுமி என்ற கேரக்டரில் நடிக்கிறார். 
 
இந்த புகைப்படத்தை பார்த்து அசந்து போன தமன்னா, பிறந்த நாள் வாழ்த்து கூறி படத்தை வெளியிட்ட படக்குழுவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
 
வீடியோ லிங்க்
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நயன்தாராவை துரத்தி பிடிக்கும் த்ரிஷா!