Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நயன்தாராவை துரத்தி பிடிக்கும் த்ரிஷா!

நயன்தாராவை துரத்தி பிடிக்கும் த்ரிஷா!
, வெள்ளி, 21 டிசம்பர் 2018 (16:06 IST)
நடிகை த்ரிஷாவின் அடுத்த படம் குறித்த சுவாரஸ்ய தகவல் வெளியானது 


 
தமிழ் திரையுலகில் சிறப்பான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து இன்று வரை இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. இவர் திரைக்கு அறிமுகமாகி 16 வருடம் ஆகி விட்டது என்று சொன்னால் வியந்து பார்ப்பார்கள். இன்றும் அதே அழகான நடிப்பால் தனக்கான இடத்தை விட்டு தராமல் நிலைத்து நிற்கிறார்.
 
2018 ஆண்டு த்ரிஷாவின் திரை பயணத்தில் முக்கிய மைல்கல்லாக அமைந்தது பிரேம்குமார் இயக்கித்தில் விஜய் சேதுபதியுடன் நடித்த 96 படம். அதனை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பொங்கலன்று வெளிவரவிருக்கும் பேட்ட படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடிக்கிறார்.
 
இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள செய்தி என்னவென்றால் , நடிகை த்ரிஷா கொரில்லா பட தயாரிப்பு நிறுவனமான "ஆல் இன் பிச்சர்ஸ் " உடன் தொடர்ச்சியாக இரண்டு படங்களுக்கு இணையவுள்ளாராம். இதுகுறித்து அவரே ட்விட்டரிலும் பதிவிட்டிருக்கிறார்.

96 வெற்றியை தொடர்ந்து நடக்கை திரிஷாவுக்கு டஜன் கணக்கில் பட வாய்ப்புகள் கிடைத்தும் நல்ல கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடிப்பதில் கவனத்தை செலுத்தி வருகிறார். 

இப்படியே போனால் நயன்தாராவையே மிஞ்சிடுவிங்க திரிஷா ...வாழ்த்துக்கள்! 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தங்கக் காசு கொடுத்த விஜய் – நடிகை கஸ்தூரி நக்கல்