Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

என்னை மத்தவங்களோடு ஒப்பிடக்கூடாது: தமன்னா பேட்டி

Advertiesment
என்னை மத்தவங்களோடு ஒப்பிடக்கூடாது: தமன்னா பேட்டி
, திங்கள், 10 டிசம்பர் 2018 (11:59 IST)
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை  தமன்னா இப்போது தெலுங்கில் கவனம் செலுத்தி வருகிறார். சிரஞ்சீவியுடன் சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடித்து வருகிறார்.


 
இவர் அண்மையில் அளித்த பேட்டியில், தனது சினிமா அனுபவங்களை பகிரிந்தார். அப்போது அவர் கூறுகையில், "என்னை மத்தவங்களோடு ஒப்பிடக்கூடாது. நான்  நானாகத்தான் இருப்பேன். அதே மாதிரி தமன்னா போல வரவேண்டும் என வேறு நடிகைகளும் நினைக்கிறது தப்பு. அவங்களோட திறமையை வெளிப்படுத்தி, அவங்க, அவங்களாகவே வெளி உலகில் அடையாளம் ஆக வேண்டும். எனக்கு என்னுடைய பலம் பலவீனம் ரெண்டுமே தெரியும். சினிமாவில் முழு கவனம் செலுத்த வேண்டும் என்று தான் விரும்புவேன். அப்படி செயல்பட்டாலே பெயர், புகழ், வெற்றி எல்லாமே தானாக வந்து சேர்ந்துவிடும்.  நான் வயதுக்கு மீறிய படங்களில்தான் நடித்து இருக்கிறேன். அழ வைக்கிற கதாபாத்திரங்களில் நடிக்க பிடிக்காது. ரசிகர்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளும் படங்களில் நடிக்கவே ஆர்வம் இருக்கிறது. தமன்னாவுக்கு பட வாய்ப்புகள் இல்லை என்று தகவல் பரப்புகின்றனர். அது உண்மை இல்லை. நிறைய படங்களில் நடிக்கிறேன்" என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொங்கலுக்கு 22 படங்கள்- அதிர வைக்கும் கோலிவுட்!