Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இணையத்தில் லீக்கான "வெறித்தனம்" - அதிர்ச்சியில் பிகில் படக்குழுவினர்!

இணையத்தில் லீக்கான
, வெள்ளி, 23 ஆகஸ்ட் 2019 (19:37 IST)
பிகில் படத்தின் "வெறித்தனம்" பாடல் இணையத்தில் லீக்காகி படக்குழுவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.


 
தெறி, மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் பிகில். இப்படத்தில், விஜய் அப்பா – மகன் என்று இரு வேடங்களில் நடித்துள்ளார்.  பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். உடன்  யோகி பாபு, கதிர், விவேக், இந்துஜா, ஜாக்கி ஷரூப், டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், சவுந்தரராஜா, தேவதர்ஷினி, ரெபா மோகா ஜான், வர்ஷா போலம்மா, ஐஎம் விஜயன் உள்பட பலர் நடித்துள்ளனர். 
 
இசைப்புயல் ஏஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. கிட்டத்தட்ட ரூ.140 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரவிருப்பதால் படக்குழுவினர் தீவிரமாக வேலை பார்த்து வருகின்றனர். 
 
இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால், இப்படத்தின் மூலம் நடிகர் விஜய் முதன்முறையாக ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடியுள்ள  ‘வெறித்தனம்’ பாடல் இணையத்தில் வெளியாகி படக்குழுவினரை  அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதற்கு முன்பு ‘சிங்கப்பெண்ணே’ பாடலும் இதே போல் இணையத்தில் லீக்கானது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியன்2 படத்தில் இருந்து அதிரடியாக விலகிய முன்னணி கதாநாயகி - ஷாக்கிங் ஸ்டேட்மென்ட்!