Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிக்பாஸ் மதுமிதா மீது போலீசில் புகார் கொடுத்த விஜய் டிவி- பரபரப்பு தகவல்!

Advertiesment
பிக்பாஸ் மதுமிதா மீது போலீசில் புகார் கொடுத்த விஜய் டிவி- பரபரப்பு தகவல்!
, புதன், 21 ஆகஸ்ட் 2019 (13:42 IST)
பிக்பாஸ் நடிகை மதுமிதா மீது விஜய் டிவி நிர்வாகம் கிண்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளது.

கடந்த ஜூன் 23ம் தேதி விஜய் டிவியில் 15 போட்டியாளர்களை கொண்டு பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கப்பட்டது. பின்னர் வைல்ட் கார்டு மூலம் சில போட்டியாளர்கள் நுழைந்தனர். இதில் காமெடி நடிகையான மதுமிதாவும் பங்குபெற்றிருந்தார். 100 நாட்கள் ஒளிபரப்பப்படும் இந்நிகழ்ச்சி தற்போது 58 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது.  
 
இதில் கடந்த வாரம் நடந்த டாஸ்க்கில்  தனக்குத் தானே தீங்கு விளைவித்துக் கொண்டதாக நடிகை மதுமிதா நிகழ்ச்சியை விட்டு அதிரடியாக வெளியேற்றப்பட்டார். அவர் வெளியேறிய பின்னர் பல காரணங்கள் பரவலாக பேசப்பட்டது. 
 
இந்நிலையில் தற்போது நடிகை மதுமிதா மீது ஸ்டார் விஜய் டிவி சட்டப்பிரிவு மேலாளர் பிரசாத் கிண்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக ஒரு அதிர்ச்சி கிடைத்துள்ளது. அதில், விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் பிக்பாஸ் -3 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மதுமிதா தன்னைத்தானே காயப்படுத்தி கொண்ட காரணத்தினால் 50 நாட்களிலேயே நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். 
 
அவர் செல்லும் போது, நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கான பில் அனுப்பி வைக்கப்பட்டது. ஒப்பந்தத்தில் கூறியபடி மதுமிதா, ஏற்கனவே 11,50,000 பெற்றுள்ளார். மீதமுள்ள நாட்களுக்கு, ஒரு நாளுக்கு 80,000 ரூபாய் வீதம் 42 நாட்களுக்கான பாக்கி பணத்தை திருப்பி தருவதாக கூறியிருந்தோம். மதுமிதாவுக்கு அதை ஒப்புக் கொண்டு சென்றார்.
 
ஆனால் இதற்கிடையில் கடந்த 19-ம் தேதி பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் டீனா என்பவருக்கு தொலைபேசி வாட்ஸ் அப் எண்ணிற்கு வாய்ஸ் மெசேஜ் மூலமாக நடிகை மதுமிதா மிரட்டல் விடுத்துள்ளார். அதாவது "பணத்தை இரண்டு நாட்களில் தரவில்லை என்றால் தற்கொலை செய்து விடுவேன் என்று கூறி மிரட்டியுள்ளார் " என்று அந்த புகாரில் கூறியுள்ளார். இந்த புகாரை பெற்றுக் கொண்ட கிண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஸ்பைடர்மேன் படங்கள் இனிமேல் வராது?? – ஒப்பந்தத்தை முறித்து கொண்ட மார்வெல்