உலகநாயகன் கமல் ஹாசன் ,  பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் வெளியான இந்தியன் 2 படத்தின், இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு இதன் படபிடிப்பு தொடங்கப்பட்டு, பின்னர் சிறிது இடைவெளி விட்டு தற்போது  மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியுள்ளனர். 
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	
									
										
								
																	
	
	 
	கமல் ஹாசனுக்கு ஜோடியாக காஜல் அகர்வால்  ஒப்பந்தமாகியிருந்த நிலையில், ரகுல்பிரீத் சிங், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரியா பவானி சங்கர் என மேலும் மூன்று நடிகைகளும் கமிட்டாகியிருக்கிறார்கள் என்ற தகவல் வெளிவந்து படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை அதிகரித்தனர். 
 
									
										
			        							
								
																	
	 
	மூன்று முன்னணி கதாநாயகிகள் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பில் சமீபத்தில் தான் ரகுல் ப்ரீத்திசிங், ப்ரியா பவானிசங்கர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்ட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து இம்மாத இறுதியில் கமல்ஹாசன் படப்பிடிப்பில் இணைவார் என்றும், பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்ததும் கமல்ஹாசன் முழு நேரத்தை படப்பிடிப்பிற்காக செலவிடுவார் என்றும் கருதப்பட்டது. 
 
									
											
							                     
							
							
			        							
								
																	
	 
	எனவே படம் வேகமெடுத்து விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது  என ரசிகர்கள் கருதிய நிலையில் தற்போது அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. அதாவது, இப்படத்தில் முக்கிய ரோலில் நடிக்கவிருந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார் என முன்பே கூறப்பட்டது. ஆனால் தற்போது அவர் இந்த படத்தில் இருந்து விலகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. 
 
									
			                     
							
							
			        							
								
																	
	 
	இதனால் ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.  மேலும் தற்போது படத்தில் இருந்து விலகியதற்கான காரணத்தை தெரிவித்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ்,   கால்ஷீட் பிரச்சனை காரணமாக தான் இப்படத்தில் இருந்து விலக வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளார்.