Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காதை கிழிக்கும் ரசிகர்களின் "பிகில்" சத்தம் - அதிகாரப்பூர்வ டீசர் அறிவிப்பு?

காதை கிழிக்கும் ரசிகர்களின்
, புதன், 4 செப்டம்பர் 2019 (16:14 IST)
பிகில் படத்தின் டீசர் மற்றும் ஆடியோ வெளியீடு குறித்த வெறித்தனமாக தகவல் ஒன்று சற்றுமுன் கிடைத்துள்ளது. 



தெறி, மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் பிகில். இப்படத்தில், விஜய் அப்பா – மகன் என்று இரு வேடங்களில் நடித்துள்ளார்.  பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். உடன்  யோகி பாபு, கதிர், விவேக், இந்துஜா, ஜாக்கி ஷரூப், டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், சவுந்தரராஜா, தேவதர்ஷினி, ரெபா மோகா ஜான், வர்ஷா போலம்மா, ஐஎம் விஜயன் உள்பட பலர் நடித்துள்ளனர். 
 
இசைப்புயல் ஏஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. கிட்டத்தட்ட ரூ.140 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரவிருப்பதால் படக்குழுவினர் தீவிரமாக வேலை பார்த்து வருகின்றனர். 
 
இதற்கிடையில் சமீபத்தில் தான் பாடலாசிரியர் விவேக் வரிகளில் உருவான வெறித்தனம் பாடல்  இணையத்தில் வெளியாகி வெறித்தனமாக ட்ரெண்டானது. இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால்,  வருகிற  செப்டம்பர் 19ம் தேதி பிகில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெறவுள்ளதாகவும் அதே நாளில் படத்தின் டீசர் வெளியாகவுள்ளது என்றும் தகவல் கிடைத்துள்ளதாக பிரபல இணையதள சேனல் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 
 
எனவே கூடிய விரைவில் படக்குழுவினரிடமிருந்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த தகவலை அறிந்த விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் டீசரை வேற லெவலில் ட்ரெண்ட் செய்வதற்கான வேலையை இப்போதே ஆரம்பித்துவிட்டனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தைரியமிருந்தால் வனிதா முன்பு இதெல்லாம் பேசு...! - வாங்கிக்கட்டிய சாண்டி!