Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

லொஸ்லியாவை இயக்கப்போகும் சேரன் - ஹீரோ யார் தெரியுமா!

Advertiesment
லொஸ்லியாவை இயக்கப்போகும் சேரன் - ஹீரோ யார் தெரியுமா!
, புதன், 4 செப்டம்பர் 2019 (14:56 IST)
பிக்பாஸில் பங்குபெறும் போட்டியாளர்கள் பெரும்பாலும் அந்நிகழ்ச்சியில் கிடைத்த புகழை வைத்து சினிமாவில் பெரிய அளவில் வளர்ந்து விடுவார்கள். அந்த வகையில் தற்போது இந்த சீசனில் பங்குபெற்றுள்ள லொஸ்லியாவுக்கு மிகப்பெரிய வாய்ப்பு காத்துக்கொண்டிருக்கிறது. 


 
ஆம், பிக்பாஸ் வீட்டில் இருக்கும் இயக்குனர் சேரன் தான் இயக்கவுள்ள புதிய படத்தில் லொஸ்லியவை ஹீரோயினாக அறிமுகம் செய்து வைக்கவுள்ளாராம். இப்படத்தில் ஹீரோவாக நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவிருப்பதாகவும் கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. 
 
சேரன் பிக்பாஸிற்கு வருவதற்கு ஐடியா கொடுத்ததே விஜய் சேதுபதி தான் என்று கூறப்பட்டது.மேலும் லொஸ்லியாவுக்கும் சேரனுக்கும் ஆரம்பத்தில் நல்ல அப்பா மகள் உறவு இருந்தாலும் பின்னர் கொஞ்சம் பிரச்சனை ஆரம்பித்தது. ஆனால் , தற்போது இருவருமே அதை சரிசெய்து வருகின்றனர். 
 
சேரன் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியதும் இதற்கான வேலைகள் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, வரும் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. சில வாரங்களுக்கு முன்னர் கூட இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் பிக்பாஸ் வீட்டிலிருக்கும் சேரனுக்கு போன் கால் அழைப்பு விடுத்து ஆறுதல் கூறினார். அந்த நேரத்தில் தான் லொஸ்லியாவுக்கும் சினிமாவில் மிகப்பெரிய வாய்ப்பு உண்டு என்று கூறி சர்ப்ரைஸ் ஒன்றை கொடுத்தார்.

எனவே கூட விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாகவே அறிவிக்கப்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வனிதாவுக்கு சப்போர்ட் செய்யும் லொஸ்லியா ஆர்மிஸ் - வீடியோ!