Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிச்சிகிட்டு ஓடும் நிர்வாகிகள்... காலியாகும் தேமுதிக கூடாரம்!!

பிச்சிகிட்டு ஓடும் நிர்வாகிகள்... காலியாகும் தேமுதிக கூடாரம்!!
, புதன், 4 செப்டம்பர் 2019 (11:46 IST)
தேமுதிக கட்சியின் கன்னியாகுமரி நிர்வாகிகள் சிலர் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளனர். 
 
நடந்து முடிந்த மக்களவை தேர்தலிலும் இடைத்தேர்தலிலும் தேமுக அதிமுகவுடன் கூட்டணி வைத்து படுதோல்வியை சந்தித்தது. 2% வாக்குகளை மட்டுமே மக்களவை தேர்தலில் பெற்று, மாநில கட்சி என்ற அந்தஸ்தை இழந்துவிட்டது. 
webdunia
இந்நிலையில், தேமுதிக கட்சியின் கன்னியாகுமரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தேமுக ஒன்றிய மற்றும் நகர நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர். ஆம், அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து அவரது தலைமையில் திமுகவில் இணைந்தனர். அப்போது கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் எம்.எல்.ஏ சுரேஷ் ராஜன் உடன் இருந்தார். 
webdunia
டிடிவி தினகரனின் அமமுக கட்சியில் இருந்து நிர்வாகிகள் மற்றும் முக்கிய தலைகள் விலகுவதை போலவே தற்போது தேமுதிகவிலும் நடைபெற்று வருகிறது. விஜயகாந்த் என்னும் ஆளுமை கட்சி பணிகளில் இருந்து விலகி இருப்பதாலும், பிரேமலதா கட்சி நடத்தும் விதம் அதிருப்தியை ஏற்படுத்துவதாலும், தேமுதிக கூடாரம் கொஞ்சம் கொஞ்சமாக காலியாகும் என கூறப்படுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொட்டும் மழையிலும் மோட்டார் பயணத்தை தொடங்கிய ஜக்கி வாசுதேவ்..