பிரபலமான பிக்பாஸ் சீசனின் வெற்றியாளரான திரைப்பிரபலம் மாரடைப்பால் காலமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல பிக்பாஸ் தொடரை சல்மான்கான் தொகுத்து வருகிறார். இதன் 13வது சீசனில் பங்கேற்று வெற்றி பெற்றவர் இந்தி திரைப்பிரபலம் சித்தார்த் சுக்லா.
40 வயதான சித்தார் சுக்லாவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அங்கு அவர் உயிரிழந்தார். அவரது இந்த திடீர் இழப்பு பாலிவுட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் திரையுலகினர் பலர் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.