Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விநாயகரை எந்தெந்த இலைகளை கொண்டு அர்ச்சிக்கலாம்? அதன் பயன்கள் என்ன?

Advertiesment
விநாயகரை எந்தெந்த இலைகளை கொண்டு அர்ச்சிக்கலாம்? அதன் பயன்கள் என்ன?
, வியாழன், 2 செப்டம்பர் 2021 (01:22 IST)
விநாயகரை 21 வகையான இலைகளைக் கொண்டு அர்ச்சிப்பது சிறந்தது எனப்படுகிறது. விநாயகருக்கு உகந்த தினங்களில், விநாயகருக்கு உகந்த இலைகளைக் கொண்டு அர்ச்சித்தால் அந்த அந்த இலைக்கு உகந்த பலன்களை பெறலாம். 
 
இந்த இலை வழிபாட்டை விநாயகர் சதுர்த்தி, சங்கட ஹர சதுர்த்தியிலும் இந்த  இலை வழிபாட்டை மேற்கொண்டால் கூடுதல் பலன் கிடைக்கும்.
 
 
 
 
 
 
* முல்லை இலை கொண்டு வழிபட்டால், அறம் வளர்க்கும். 
 
* கரிசலாங்கண்ணி இலையால் அர்ச்சித்து வழிபட்டால், இல்லத்துக்குத் தேவையான பொருட் சேர்க்கை நிகழும்.
 
* வில்வம் இலையால் அர்ச்சித்து விநாயகரை வழிபட்டால், விரும்பிய அனைத்தும் கிடைக்கும்.
 
* அருகம்புல்லால் அர்ச்சித்து வணங்கினால் அனைத்து சௌபாக்கியங்களும் கிடைக்கப் பெறலாம்!
 
* இலந்தை இலையால் அர்ச்சனை செய்து ஆனைமுகத்தானை வழிபட்டால், கல்வியில் மேன்மை பெறலாம்.
 
* ஊமத்தை இலையைக் கொண்டு அர்ச்சித்து வழிபட்டால், பெருந்தன்மையான மனம் பெறலாம்!
 
* வன்னி இலை கொண்டு வழிபட்டால், பூவுலகிலும் சொர்க்க வாழ்விலும் நன்மைகள் கிடைக்கப் பெறும்.
 
* நாயுருவி இலையால் வழிபட்டால், முகப் பொலிவும் அழகும் கூடும். தேஜசுடன் வாழலாம்!
 
* கண்டங்கத்திரி இலையால் கணபதியை வழிபட்டால், வீரமும், தைரியமும் கிடைக்கப் பெறலாம்.
 
* அரளி இலையால் ஆனைமுகனை வழிபட்டால், எல்லா முயற்சியிலும் வெற்றி கிடைக்கும்.
 
* எருக்கம் இலை கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டால், கருவில் உள்ள சிசுவுக்கு பாதுகாப்பு கிடைக்கும். குழந்தை ஞானத்துடனும் யோகத்துடனும் வளரும்.
 
* மருதம் இலையால் வழிபட்டால், மகப்பேறு கிடைக்கும்.
 
* விஷ்ணுகிராந்தி இலையால் விநாயகப் பெருமானை வழிபட்டால், தேர்ந்த அறிவுடன் திகழலாம். காரியத்தில் வெற்றி கிடைக்கும்.
 
* மாதுளை இலையால் அர்ச்சனை செய்து வழிபட்டால், பெரும் புகழும் நற்பெயரும் கிடைக்கும்.
 
* தேவதாரு இலையால் அர்ச்சனை செய்து வழிபட்டால், எதையும் தாங்கும் மனோ தைரியம் கிடைக்கும்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இலங்கையில் பொருளாதார அவசரநிலை அமல் - எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு