Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இறுதிகட்ட கோவிட் டெஸ்ட் முடிந்தது: சனிக்கிழமை பிக்பாஸ் படப்பிடிப்பு!

Webdunia
புதன், 30 செப்டம்பர் 2020 (18:45 IST)
கொரோனா வைரஸ் பரபரப்பிலும் பிக்பாஸ் நான்காவது சீசன் தொடங்கவிள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் சென்னையில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்கள் என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் இன்று காலை தனிமைப்படுத்தப் பட்டுள்ள போட்டியாளர்கள் அனைவருக்கும் இறுதிகட்ட கொரோனா பரிசோதனை செய்ததாகவும் அதில் அனைவருக்கும் நெகட்டிவ் ரிசல்ட் வந்து இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது 
 
இதனை அடுத்து சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொடக்க விழாவுக்கான படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லி அருகில் உள்ள தனியார் ஸ்டுடியோ ஒன்றில் போடப்பட்டுள்ள பிரம்மாண்டமான அரங்கில் நடைபெற உள்ளது 
 
இதனை அடுத்து இந்த இரண்டு நாள் படப்பிடிப்பின் எடிட்டிங் பணிகள் முடிவடைந்து அக்டோபர் 4ஆம் தேதி முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்து ஏற்கனவே பார்த்தோம். அவர்கள் பின்வருமாறு: நடிகை சனம் ஷெட்டி, கேப்ரில்லா, நடிகை ரேகா, நடிகை ஷிவானி நாராயணன், நடிகை ரம்யா பாண்டியன், ஆர்ஜே அர்ச்சனா, அறந்தாங்கி நிஷா, பாடகர் ஆஜித், பாடகர் வேல்முருகன், நடிகர் பாலாஜி முருகதாஸ், ,நடிகர் சுரேஷ், நடிகர் ஜித்தன் ரமேஷ், நடிகர் ஆரி, நடிகர் அனுமோகன், மாடல் சோம்சேகர்
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஷிவானி நாராயணின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

லுங்கி கட்டி க்யூட்டான போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

ஜி வி பிரகாஷ் & சைந்தவி விவாகரத்து… நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

மகனுக்காகக் கைவிட்ட வன்முறையை அதே மகனுக்காகக் கையில் எடுக்கும் AK..இதுதான் GBU கதையா?

5 ஆண்டு தாமதத்துக்குப் பிறகு ரிலீஸாகும் மிர்ச்சி சிவாவின் ‘சுமோ’!

அடுத்த கட்டுரையில்
Show comments