Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரு வருடம் கழித்து சம்பளம் கொடுத்த விஜய் டிவி: கஸ்தூரியின் பரபரப்பு டுவீட்

Advertiesment
ஒரு வருடம் கழித்து சம்பளம் கொடுத்த விஜய் டிவி: கஸ்தூரியின் பரபரப்பு டுவீட்
, புதன், 30 செப்டம்பர் 2020 (07:47 IST)
கடந்த ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் வைல்ட்கார்ட் போட்டியாளராக கலந்து கொண்டவர்களில் ஒருவர் நடிகை கஸ்தூரி என்பது தெரிந்ததே. எதிர்பார்த்த அளவு பொது மக்களின் வரவேற்பை அவர் பெறவில்லை என்பதால் ஓரிரு வாரங்களில் வெளியேற்றப்பட்டார்
 
ஆனால் கஸ்தூரி தரப்பில் இருந்து தான் பேசிய பல ஆக்கபூர்வமான பேச்சுகளை விஜய் டிவி ஒளிபரப்பு இல்லை என்றும் அதனால்தான் அந்த நிகழ்ச்சியில் வெளியேற்றப்பட்டதாகவும் கூறப்பட்டது. 
 
இந்த நிலையில் தற்போது அவர் பதிவு செய்துள்ள டுவீட் ஒன்றில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக ஒரு வருடம் கழித்து விஜய் டிவி நிறுவனம் சம்பளத்தை செட்டில் செய்து உள்ளது என்று கூறியுள்ளார் 
 
குழந்தைகள் நல அமைப்பு ஒன்றில் உடல்நலமில்லாமல் அறுவை சிகிச்சை செய்வதற்காக காத்திருந்த குழந்தைகளுக்கு உதவி செய்வதற்காகதான் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் கலந்து கொண்டதாகவும் ஆனால் விஜய் டிவி ஒரு வருடம் எழுப்பி தனக்கு சம்பளம் கொடுத்து உள்ளதாகவும் அவர் அதிர்ச்சியுடன் அந்த டுவிட்டரில் கூறியுள்ளார். கஸ்தூரியின் இந்த பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதுக்குள்ள என்னென்னமோ கத கட்டிட்டாங்க - நடிகையுடன் நெருக்கமா இருப்பதற்கு இது தான் காரணம்!