Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திவ்யாவை பதவியிலிருந்து தூக்கிய பிக்பாஸ்! விஜே பாருவுக்கு கிடைத்த லக்கி சான்ஸ்!? - Biggboss season 9

Advertiesment
vj paaru divya clash

Prasanth K

, புதன், 5 நவம்பர் 2025 (16:09 IST)

பிக்பாஸ் வீட்டில் நடந்து வரும் ஆஹா ஓஹோ ஹோட்டல் டாஸ்க்கில் திவ்யாவின் பதவி பறிபோகும் நிலையில் இருப்பதை கடைசி ப்ரோமோ காட்டியுள்ளது.

 

வைல்ட் கார்ட் போட்டியாளராக உள்ளே சென்ற திவ்யாவிற்கு முதல் வாரமே வீட்டு தல பதவி கிடைத்ததுடன், டபுள் ட்ரீட்டாக ஆஹா ஓஹோ ஹோட்டலின் மேனேஜர் பதவியும் கிடைத்தது. ஆனால் திவ்யா எந்த பாரபட்சமும் இல்லாமல் கடுமையாக இருந்து ஒரு கேம் விளையாட முயன்றார். அவரது கண்டிப்பான தோரணை ஹவுஸ்மேட்ஸை எரிச்சல் படுத்தியுள்ளது.

 

இந்நிலையில் ஹோட்டலின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை என விருந்தினர்கள் புகாரளித்த நிலையில், யார் செயல்பாடுகள் சரியில்லை என பிக்பாஸ் அனைவரும் ஒன்று சேர்ந்து முடிவு செய்து சொல்லுமாறு கேட்க எல்லாரும் திவ்யாவை கையை காட்டியுள்ளனர். இதனால் திவ்யாவின் மேனேஜர் பதவி பறிக்கப்பட்டு அவர் வேறு பணிக்கு மாற்றப்படும் சூழல் உருவாகியுள்ளது.

 

இதனால் அடுத்த மேனேஜரை ஹவுஸ்மேட்ஸ் ஓட்டு போட்டு முடிவு செய்வார்களா? அல்லது சீனியாரிட்டி அடிப்படையில் அசிஸ்டெண்ட் மேனேஜராக இருக்கும் விஜே பாரு மேனேஜராக உயர்த்தப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை விஜே பாரு மேனேஜராக வந்தால் ஆஹா ஓஹோ ஹோட்டல் என்ன ஆகும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் வேசம் போடும் ரங்கராஜ் பாண்டே