மூன்றாம் திருமணத்திற்கு ரெடியான ரேஷ்மா ? எதிர்பார்த்த பதிலை அவரே கூறிவிட்டார்

செவ்வாய், 19 மே 2020 (09:09 IST)
கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாம் பகுதியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் நடிகை ரேஷ்மா. இவர் ’வம்சம்’ என்ற தொலைக்காட்சித் தொடரில் அறிமுகமாகி அதன் பின்னர் ’மசாலா படம்’, ’வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்றவர்.

ரேஷ்மாவிற்கு இதுவரை இரண்டு திருமணம் நடைபெற்று விவாகரத்தில் முடிந்துவிட்டது. மேலும், இவருக்கு ஒரு மகன் பிறந்து இறந்துவிட்டார். அவரது கல்லறை அமெரிக்காவில் இருப்பதால் அவ்வப்போது அங்கு சென்று பார்த்துவிட்டு வருவேன் என்று பிக்பாஸில் இப்போதே கூறியுள்ளார். இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரேஷ்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆண் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டதால் மூன்றாம் திருமணம் செய்துகொள்ளப்போவதாக தகவல் பரவியது.

இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கு சமயத்தில் இணையவாசிகளுடன் லைவ் சேட்டில் கலந்துரையாடிய அவரிடம் ஒருவர் மூன்றாம் திருமணத்தை குறித்து கேள்வி எழுப்ப அதற்கு பதிலளித்த ரேஷ்மா... " இல்லை " என்று ஒரே வார்த்தை பதிலளித்து முடித்துக்கொண்டார். இதற்கு முன்னர் கூட " நீங்கள் என்னைப் பற்றியும் என் தனிப்பட்ட வாழ்க்கை பற்றியும் கூறும் எதுவும் உண்மை இல்லை. இனி நான் யாரையும் திருமணம் செய்து கொள்ள போவதில்லை என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் முறுக்கு அடுப்பில் முறுக்கு சுட்ட மணிமேகலை: புதிய பிசினஸ் ஆரம்பம்