Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உனக்கு ஏத்த பையன நீயே பாருன்னு சொல்லிட்டேன்... ஆனால் - ரகுல் ப்ரீத் சிங் தயார் பேட்டி!

Advertiesment
உனக்கு ஏத்த பையன நீயே பாருன்னு சொல்லிட்டேன்... ஆனால் - ரகுல் ப்ரீத் சிங் தயார் பேட்டி!
, ஞாயிறு, 10 மே 2020 (08:29 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக விளங்கி வரும் அழகு பதுமை ரகுல் ப்ரீத் சிங் தமிழ், தெலுங்கு சினிமாவில் ரவுண்டு கட்டி வலம் வந்ததையடுத்து தற்போது பாலிவுட்டிலும் இறங்கி கலக்கி வருகிறார். கடைசியாக இவர் நடித்த 'என்.ஜி.கே' படம் தோல்வியடைந்த போதிலும், அரை டஜன் படத்தில் கமிட் ஆகி ஓய்வில்லாமல் நடித்து வருகிறார்.

பொதுவாக நடிகைகள் என்றாலே அவ்வளவு சீக்கிரத்தில் திருமணம் செய்துகொள்ளமாட்டார்கள். திருமணம் என்ற பேச்சு எடுத்தாலே அதற்கான பதில் அவர்களுக்கே தெரியாதது போல் பதில் சொல்லுவார்கள். ஆனால் நடிகையின் பெற்றோர்கள் மற்ற பெண்களை போல் திருமணம் செய்துவைக்க ஆசைப்படுவார்கள். மார்க்கெட் குறைந்துவிடும் என்பதை கருத்தில் கொண்டு நடிகைகள் திருமணத்தை தள்ளி போடுவார்கள் இது வழக்கமாக நடப்பது தான்.

அந்தவகையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ரகுல் ப்ரீத் சிங் தயார் ரினி சிங் தனது மகளின் திருமணத்தை குறித்து பேசினார். அதாவது,  " நான் பல முறை அவளிடம் திருமணம் குறித்து சொல்லி விட்டேன். ஆனால், அவள் என் பேச்சை கேட்பதாக தெரியவில்லை. அதனால் உனக்கு ஏற்றவாறு ஒரு நல்ல பையனை நீயே பாரு என்றும் கூட சொல்லி விட்டேன். அப்படியும் அவள் என் பேச்சை கேட்க மறுக்கிறாள். அதனால் இனி நாங்கள் தான் அவளுக்கு ஒரு நல்ல மாப்பிள்ளையை பார்க்க வேண்டும்.அவளை விட வயதில் சிறியவராக இருந்தாலும் அவ்வளவுக்கு சிறந்த நபரை தேர்ந்தெடுப்போம். ஆனால், என் மகள்  குறைந்த வயதுடையவர் வேண்டாம் என்னைவிட ஒரு வயது அதிகமாக இருக்கவேண்டும் என கட்டளை போடுகிறாள் என கூறி சிரித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லாக்டவுனில் Weight போட்டுடீங்க... இடுப்பு மடிப்பெல்லாம் தொங்கிடுச்சு - சயீஷா டான்ஸ் வீடியோ ட்ரோல்!