Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

லாஸ்லியாவிற்கு விரைவில் திருணம்... அந்த லக்கி பாய் இவர் தான்!

Advertiesment
லாஸ்லியாவிற்கு விரைவில் திருணம்... அந்த லக்கி பாய் இவர் தான்!
, வெள்ளி, 30 அக்டோபர் 2020 (17:34 IST)
கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளர்களை ஒருவரான லாஸ்லியாவுக்குத்தான் முதன் முதலாக ஆர்மி தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. லாஸ்லியாவின் ஆர்மி அவரது புகழை பாடிக்கொண்டு லாஸ்லியாவை தினந்தோறும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆக்கிக் கொண்டிருந்தனர்.

பிக்பாஸில் கிடைத்த புகழை வைத்து லாஸ்லியா தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். நடிகர் ஆரிக்கு ஜோடியாக புதுப்படத்தில் நடித்துள்ளார். இதில் பிக்பாஸ் அபிராமி, மற்றும் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும், ஹர்பஜன் சிங்கிற்கு ஜோடியாக பிரண்ட்ஷிப் படத்தில் நடித்துள்ளார். அத்துடன், அறிமுக நாயகன் ஒருவருக்கு ஜோடியாக மற்றொரு படத்தில் கமிட்டாகியுள்ளார்.

இந்நிலையில் தற்ப்போது கொரோனா ஊரடங்கு சமயம் என்பதால் படவாய்ப்புகள் இன்றி சமூக வலைத்தளத்தில் ஆக்டீவாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தற்ப்போது லாஸ்லியாவிற்கு அவரது பெறோர்கள் திருமணம் செய்துவைக்க முடிவெடுத்துள்ளார்களாம். கனடாவை சேர்ந்த தன் நண்பன் மகனை லாஸ்லியாவிற்கு மணமுடிக்க அவரது பெற்றோர்கள் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்ளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இருந்தும் இதுப்பற்றிய அதிகாரப்பூர்வ தகவலுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடுத்தடுத்து இரண்டு படங்கள் – பாண்டிராஜை மடக்கிய சன் நிறுவனம்!