நடிகர் கமலஹாசனின் ஸ்டைலிஷ் தோற்றம் இணையத்தில் வைரல்
நடிகர் கமலஹாசன் அரசியல் , நடிப்பு மற்றும் பிக்பாஸ் என தொடர்ந்து பிஸியாக இருந்து வருகிறார். இந்த நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் தன்னுடைய 232-வது படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தற்ப்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால், பிரபல புகைப்படக் கலைஞர் வெங்கெட்ராம் கமலின் ஸ்டைலிஷான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அனைவரது பார்வையும் திசை திரும்பியுள்ளார். கருப்பு உடையணிந்து அழகான சிரிப்புடன் செம ஸ்டைலிஷ் போஸ் கொடுத்துள்ள இந்த புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து தீயாய் பரவி வருகிறது.