Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒன் டே டூ கோ... பட்டய கிளப்பும் பிக்பாஸ் ப்ரோமோ வீடியோ!

Advertiesment
ஒன் டே டூ கோ... பட்டய கிளப்பும் பிக்பாஸ் ப்ரோமோ வீடியோ!
, சனி, 16 ஜனவரி 2021 (15:08 IST)
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி நாளையுடன் முடிவடைகிறது. இத சீசனில் ஆரி வெற்றியாளர் என மக்கள் எப்போதோ முத்திரை குத்திவிட்டனர். இது வீட்டிலிருக்கும் சக போட்டியாளர்களுக்கும் தெரிந்துவிட்டது. அதனால் தான் நேற்று கூட 5 லட்சம் பண பெட்டியுடன் கேபி வெளியேறிவிட்டார். 
 
மேலும் ரியோவும் அந்த பணத்தை கேட்டு கேபியை எமோஷனலாக பிளாக் மெயில் செய்தார். இருந்தும் கேபி தன் முடிவில் உறுதியாக இருந்து பணத்துடன் வெளியேறினார். இந்நிலையில் வார இறுதி நாளான இன்று கமல் ஹாசன் வந்து " Bigg Boss grand finale... 1 day to go " என பேசி நிகழ்ச்சி மீதான சுவாரஸ்யத்தை அதிகரித்துள்ளார். 
 
மக்கள் எதிர்பார்த்தது போலவே ஆரி டைட்டில் வின்னர் ஆகிறாரா? என்பதை பார்க்க அவரது குடும்பத்தினரை விட ஆடியன்ஸ் தான் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர். பார்ப்போம் மக்கள் ஒட்டு ஜெயிக்கிறதா? இல்லை விஜய் டிவியின் திட்டம் ஜெயிக்கிறாதா என்று... இதோ அந்த புதிய ப்ரோமோ லிங்க்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பட்டாக்கத்தியால் பிறந்த நாள் கேக்: வருத்தம் தெரிவித்த விஜய்சேதுபதி!