Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அட்லி ஷாருக் கான் படம் ட்ராப்பா? அவரே கொடுத்த செம்ம விளக்கம்!

Advertiesment
அட்லி ஷாருக் கான் படம் ட்ராப்பா? அவரே கொடுத்த செம்ம விளக்கம்!
, சனி, 12 மார்ச் 2022 (09:20 IST)
ஷாருக்கானை வைத்து படம் இயக்க இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகக் காத்திருக்கும் அட்லி இப்போது அந்த படத்துக்கான வேலைகளில் பிஸியாக இருக்கிறார்.

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கும் திரைப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் புனேவில் தொடங்கி நடந்தது. படப்பிடிப்பில் நயன்தாரா, ஷாருக்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த படத்துக்காக மும்பையில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் வசித்து வருகிறார் அட்லி. இந்நிலையில் இந்த படம் கைவிடப்பட்டதாக வதந்திகள் இணையத்தில் பரவின.

அதற்கு பதிலளிக்கும் விதமாக இயக்குனர் அட்லி தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் ’ஒருநாள் உங்களைத் தவறாக நடத்தியவர்கள் வருத்தப்படும் நாள் வரும். என்னை நம்புங்கள் கண்டிப்பாக அந்த நாள் வரும்’ எனக் கூறியுள்ளார். இதன் மூலம் படம் நிறுத்தப்படவில்லை என்பதை பதிலாக கொடுத்துள்ளார் அட்லி. அட்லி இயக்கும் இந்த படத்தில் நிறைய தமிழ்க் கலைஞர்கள் பணியாற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாறன் படம் எப்படி இருக்கு? ரசிகர்களின் நெகட்டிவ் கமெண்ட்ஸ்!