Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாறன் படத்தில் சர்ப்ரைஸாக வந்த நடிகர்… ஒரே ஆறுதல்!

மாறன் படத்தில் சர்ப்ரைஸாக வந்த நடிகர்… ஒரே ஆறுதல்!
, சனி, 12 மார்ச் 2022 (10:47 IST)
இயக்குனர் அமீர் வடசென்னை படத்துக்குப் பிறகு தனுஷோடு மாறன் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்துள்ளார்.

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள மாறன் படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனனும், வில்லனாக சமுத்திரக்கனியும் நடிக்கின்றனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார், சத்யஜோதி பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர். இந்த படம் நேற்று மாலை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியானது.

வெளியானது முதல் நெகட்டிவ் விமர்சனங்களையே பெற்று வருகிறது. ரொம்பவும் கிளிஷேவான கதை என்றும் திரைக்கதையில் சுவாரஸ்யம் ஏற்படுத்தும் சம்பவங்கள் ஒன்று கூட இல்லை என்றும் ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். துருவங்கள் 16 படம் மூலமாக கவனம் ஈர்த்த கார்த்திக் நரேன் அதன் பிறகு இயக்கிய அனைத்து படங்களும் மோசமான விமர்சனங்களையே பெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படத்தின் ஒரே ஆறுதலாக இயக்குனர் அமீர் ஒரு கௌரவ வேடத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் அந்த படத்தில் படக்குழுவினர் எந்த வொரு ப்ரமோஷனிலும் அவர் பெயரை வெளியிடாமல் சஸ்பென்ஸாக வைத்திருந்தனர். அந்த ஒரு சர்ப்ரைஸ் மட்டுமே படத்தில் ஒரே ஆறுதலாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த வடசென்னை படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முழுசா பார்முக்கு வந்துட்டாங்க.... சோஃபாவில் தொடை காட்டி சூடேத்தும் அஞ்சனா!'