Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தடை செய்யப்பட வேண்டிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.. கார்ட்டுனிஸ்ட் பாலா கண்டனம்..!

தடை செய்யப்பட வேண்டிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.. கார்ட்டுனிஸ்ட் பாலா கண்டனம்..!
, வெள்ளி, 6 அக்டோபர் 2023 (08:46 IST)
தமிழ் சினிமாவில் இருந்து தடை செய்யப்பட வேண்டியவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் என்று கார்ட்டூனிஸ்ட் பாலா தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ’
 
லோகேஷ் கனகராஜ் இயக்கிய கிட்டத்தட்ட அனைத்து படங்களிலும் ரத்தம், போதை பொருள், வன்முறை காட்சிகள் அதிகம் இருக்கும் என்பதும் அவரது ஒரு படம் கூட யூ சான்றிதழ் பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் நேற்று லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ திரைப்படத்தின் டிரைலர் வெளியான நிலையில் இந்த ட்ரெய்லரில் உள்ள அனைத்து காட்சிகளுமே கிட்டத்தட்ட ரத்தமயமாகவே இருந்தது. 
 
இதற்கு பலர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் கார்ட்டூனிஸ்ட் பாலா தனது சமூக வலைதளத்தில் இது குறித்து கூறி இருப்பதாவது:
 
சினிமாவில் தடை செய்யப்பட வேண்டிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அடுத்த தலைமுறை கையில் அருவாளையும், ரத்த சிதறலை நக்கிப் பார்க்கும் சைக்கோ புத்தியையும் கொடுப்பதாகவே அவரது காட்சி அமைப்புகள் இருக்கின்றன. லோகேஷ்  மீது அன்பு கொண்டவர்கள் அவரை நல்ல மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்லவும்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரெண்டரை நிமிச ட்ரைலரையே அமைதியா பாக்க தெரியாத விஜய் ரசிகர்கள்: புளூசட்டை மாறன் கண்டனம்..!