Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிதாமகன் தயாரிப்பாளர் V A துரை காலமானார்!

Advertiesment
பிதாமகன் தயாரிப்பாளர்  V A துரை காலமானார்!
, செவ்வாய், 3 அக்டோபர் 2023 (06:48 IST)
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தராக இருந்து பல படங்களை தயாரித்து விநியோகம் செய்தவர் தயாரிப்பாளர் வி ஏ துரை. எவர் கிரீன் மூவி இண்டர்நேஷனல் என்ற தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனத்தை நடத்தியவ இவர், என்னம்மா கண்ணு, லூட்டி, லவ்லி, விவரமான ஆளு, பிதாமகன், கஜேந்திரா, நாய் குட்டி, காகித கப்பல் ஆகிய படங்களை தயாரித்துள்ளார்.

இந்த படங்களில் பிதாமகன் தவிர மற்ற படங்கள் எவையும் வெற்றிகரமான படமாக அமையவில்லை. இதனால் தனது சொத்துகளை இழந்த துரை, ஒரு கட்டத்தில் நலிந்த தயாரிப்பாளராக காணாமல் போனார். சக்கரை நோயால் பாதிக்கப்பட்டு காலில் புண் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், மருந்து வாங்க காசு கூட இல்லை என்று உதவி சில மாதங்களுக்கு முன்னர் வீடியோ வெளியிட்டிருந்தார். இதையடுத்து அவருக்கு ரஜினிகாந்த், சூர்யா மற்றும் விக்ரம் ஆகியோர் உதவி செய்திருந்தனர்.

அதன் பின்னர் சிகிச்சையில் அவரின் ஒரு கால் அகற்றப்பட்டது. இந்நிலையில் இப்போது அவர் உடல்நலக் குறைவால் இயற்கை எய்தியுள்ளார். இதையடுத்து சக கலைஞர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் 68 பட பூஜை.....பிரபல நடிகர்கள் பங்கேற்பு...வைரல் புகைப்படம்