அக்டோபர் 1 முதல் பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் பழனி முருகன் கோவிலுக்குள் செல்லும் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
பழனி முருகன் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் தங்களது செல்போன் மற்றும் கேமராக்களை பாதுகாப்பாக மலையடிவாரத்தில் ஒப்படைத்துச் செல்ல வசதி செய்யப்பட்டுள்ளது.
கோயில் நிர்வாகம் சார்பில் கைப்பேசி வைப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் ரூ.5 கட்டணம் செலுத்தி, ரசீதை பெற்றுக்கொண்டு பக்தர்கள் செல்போனை இங்கு வைத்துச் செல்லாலாம் என்றும், அதன்பின் மீண்டும் தரிசனம் முடித்த பின், ரசீதை கொடுத்து செல்போனை பெற்றுச் செல்லலாம் என்றும் தேவஸ்தான நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்..