தர்பார் படத்தின் தோல்வியால் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் சில வருடங்களாக படம் இயக்காமல் இருந்து வருகிறார். இடையில் அவர் அக்ஷய் குமார் மற்றும் ஒரு குரங்கை வைத்து ஒரு பிரம்மாண்ட படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அந்த படம் அடுத்த கட்டத்துக்கு செல்லவில்லை.
இதனால் மீண்டும் ஹிட் படம் கொடுத்து கம்பேக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் அவர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஒரு படத்தை உருவாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை ஸ்பைடர் படத்தின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இந்தபடத்தில் சிவகார்த்திகேயன் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த 2015 ஆம் ஆண்டு காக்கிச்சட்டை படத்தில் சிவகார்த்திகேயன் போலீஸ் வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.