Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

100 கோடி ரூபாய் வசூலை மிஸ் செய்த சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படம்!

100 கோடி ரூபாய் வசூலை மிஸ் செய்த சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படம்!
, வியாழன், 10 ஆகஸ்ட் 2023 (11:59 IST)
சிவகார்த்திகேயன் நடிப்பில்  வெளியான மாவீரன் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் நல்ல ஓப்பனிங்கைப் பெற்றது. படத்தின் முதல் பாதி எல்லோருக்கும் பிடித்திருப்பதாகவும், ஆனால் இரண்டாம் பாதியில் சொதப்பி இருப்பதாகவும் ரசிகர்கள் கருத்துகள் வந்தன.

இந்நிலையில் திரையரங்கில் வெளியாகி ஒரு மாதம் கழித்து இப்போது ஓடிடியில் ரிலீஸாக உள்ளது. அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது.

இந்நிலையில் மாவீரன் திரைப்படம் திரையரங்கு மூலமாக மொத்தமாக 89 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. சிவகார்த்திகேயனின் டாக்டர் மற்றும் டான் ஆகிய திரைப்படங்கள் 100 கோடி ரூபாய் வசூலைப் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் ஜில்லா இயக்குனர் படத்தில் நடிக்கிறாரா விஜய்?