மூன்று வேடம், ஐந்து மொழி: சிவகார்த்திகேயனின் மெகா படம் குறித்த தகவல்!

செவ்வாய், 18 பிப்ரவரி 2020 (19:17 IST)
சிவகார்த்திகேயன் நடிப்பில் ரவிகுமார் இயக்கி வரும் அயலான் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மூன்று வேடத்தில் நடித்து வருவதாகவும் அதில் ஒரு வேடம் வேற்றுகிரக மனிதர் என்றும் இந்த வேடம் சிவகார்த்திகேயனுக்கு உண்மையாகவே வித்தியாசமான கெட்டப் ஆக இருக்கும் என்றும் அடையாளமே தெரியாத அளவில் இந்த வேடத்திற்காக வெளிநாட்டிலிருந்து மேக்கப்மேன் வரவழைக்கப்படுவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது
 
இந்த நிலையில் இந்த படத்தின் கதை உலகம் முழுவதும் பொருத்தமாக இருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதால் ஆங்கிலத்திலும் டப் செய்யப்படவுள்ளதாகவும், அதுமட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என மொத்தம் ஐந்து மொழிகளில் உருவாக்கப்பட இருப்பதாகவும் செய்திகள் தற்போது வெளியாகியுள்ளது 
 
மூன்று வேடங்கள், ஐந்து மொழிகள் என மெகா திட்டம் காரணமாக இந்த படத்தின் பட்ஜெட் எகிறி உள்ளதாகவும் இதன் காரணமாகவே கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்த படத்தின் தயாரிப்பில் இணைந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் முடிவடைந்தாலும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் அதிகம் இருப்பதால் இவ்வருட இறுதியில் தான் ரிலீசுக்கு தயாராகும் என்றும் கூறப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் அறந்தாங்கி நிஷாவின் குழந்தை விஜய் டிவியில் தான் வளருது - பிரபலத்தின் கலகலப்பான பேட்டி!